கிழக்கு இலக்கியப் பரப்பிலே மற்றுமொரு இழப்பு

89

நேற்றிரவு இலங்கை தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றிய பல்துறை எழுத்தாளர் கலாபூசணம் எஸ். ஐ. ஆர். எம். செய்யது ஹசன் மௌலானா அவர்கள் காலமானார்.

இலங்கை தமிழ் இலக்கியத்திற்கு பெரும் பங்காற்றிய பல்துறை எழுத்தாளரும் தமிழ் அறிஞரும் மருதமுனையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசியருமான எஸ். ஐ. ஆர். எம். செய்யது ஹசன் மௌலானா தனது 84ஆவது வயதில் நேற்றிரவு 11 மணியளவிலே நிந்தவூரில் காலமானார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 7.30 மணியளவில் நிந்தவூர் மையவாடியில் இடம்பெற்றது .

1937 ஒக்டோபர் 2ஆம் திகதி மருதமுனையில் பிறந்தவர் ஆசிரியராக சில காலம் பணியாற்றி நிந்தவூரில் திருமணம் முடித்து இலங்கையின் தமிழ் இலக்கியப் பரப்பிலே ஆழமாக தடம் பதித்தவர்.

1960ஆம் ஆண்டு முதல் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடு ,மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் நடாத்துவதற்கு காரணகர்த்தாவாக இருந்து சிறப்பாக நடாத்தி முடித்தவர்.

இலங்கையில் வெளிவந்த வெளிவருகின்ற தமிழ்ப் பத்திரிகைகள் ,சஞ்சிகைகள் ,போன்றவற்றிலே கவிதைகள் இலக்கிய கட்டுரைகள் போன்றவற்றை எழுதி புகழ் பெற்றவர் .

முகைதீன் புராணம் காப்பியத்திற்கு உரையெழுதியவர். இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகா நாடுகலிள் பேருரைகளை நிகழ்த்தியவர் .இஸ்லாமிய தமிழ் இலக்கிய சொற்பொழிவுகள் அரபுத்தமிழ், இஸ்லாமும் தமிழும் , இலக்கியச் சங்கமம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் .புலவர்மணி ஆ சரிபுத்தீன் அவர்களின் மாணவரான இவர் 1993ஆம் ஆண்டு முஸ்லீம் பண்பாட்டு திணைக்களத்தினால் தாஜுல் அதீக் பட்டம் கொடுத்து கெளரவிக்கப்பட்டார் .