அல் குவைதா, தாலிபானுடன் இலங்கைக்கும் தொடர்புண்டா?

131

சர்வதேச தீவிரவாத அமைப்புக்களான அக் குவைதா மற்றும் தாலிபான் உள்ளிட்டவைகளுடன் தொடர்பு வைத்திருக்கும் இலங்கையின் மற்றுமொரு அமைப்பு பற்றிய விசாரணைகளை புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளது.

இஸ்லாமிக் ரிலிஜ் ஏஜன்ஸி எனப்படும் இந்த அமைப்பு, கிழக்கு மாகாணத்தை தளமாகக் கொண்டு தற்போதும் இயங்கிக் கொண்டிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புலனாய்வுப்பிரிவு நடத்திய விசாரணையில், கட்டார், சவூதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் பல்வேறு அமைப்புக்களிடம் இருந்தும் சுமார் 24 கோடி ரூபா நிதி குறித்த அமைப்பிற்குக் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இன்று சனிக்கிழமை வெளியாகிய திவயின பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.