புர்கா தடை விவகாரத்தில் தலையிடுமாறு தென்னாபிரிக்காவிடம் கோரிக்கை..!

27

புர்கா அணிதல் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மதரஸா பாடசாலைகளை மூடுவதற்கான இலங்கையில் தீர்மானம் தொடர்பில் தென் ஆபிரிக்கா தலையிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்காவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் அந்த நாட்டு வெளியுறவு அமைச்சிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளன.

நாட்டில் புர்கா அணிவதை தடைசெய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற அடிப்படையில் குறித்த தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில், தென் ஆபிரிக்கா தலையிட வேண்டுமென சர்வதேச உறவுகள் அமைச்சர் Naledi Pandor இடம் அந்த நாட்டு ஐக்கிய உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது.