உலகின் வலுவான இராணுவம்; சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா முதல் நான்கு இடங்களில்

28

உலகின் மிக வலுவான இராணுவ சக்தியை கொண்டுள்ள நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது அமெரிக்கா, மூன்றாவது ரஷ்யா, நான்காவது இந்தியா, ஐந்தாவது பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதில் இடம்பிடித்துள்ளது

பாதுகாப்பு வலைத்தளமான “மிலிட்டரி டைரக்ட்”, உலகின் மிக வலுவான ராணுவ சக்தியை கொண்டுள்ள நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதில், இராணுவத்திற்கான பட்ஜெட் திட்டங்கள், இராணுவ வீரர்களின் எண்ணிக்கை, வான்வழி, கடல், நிலம் மற்றும் அணு வளங்கள், உபகரணங்களின் எடை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு, இறுதி இராணுவ வலிமைக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது. மதிப்பெண்கள் அடிப்படையில், உலகின் வலிமையான இராணுவத்தை கொண்டுள்ள நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனா, குறியீட்டில் 100க்கு 82 மதிப்பெண்கள் பெற்றுள்ளது.
அமெரிக்கா, 74 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ரஷ்யா 69 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், இந்தியா 61 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், பிரான்ஸ் 58 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன. மிகப்பெரிய ராணுவ பட்ஜெட்டை கொண்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 732 பில்லியன் அமெரிக்க டாலருடன் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. 261 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.