இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் செயலாளரை, அவசரமாக தொடர்பு கொண்டார் ஜனாதிபதி கோத்தாபய

57
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகமான யூசெப் அல் ஓதெமைனை (Dr. Yousef A. Al-Othaimeen) தொலைபேசியில் தொடர்புகொண்டார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச.
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் யூசெப் அல் ஓதெமைனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (The Organization of Islamic Cooperation) தெரிவித்துள்ளது.
இந்த தொலைபேசி உரையாடலின் போது இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இலங்கையில் முஸ்லிம் சமூகத்துடனான உறவுகள் குறித்தும் ஆராயப்பட்டதாக ஓஐசி தெரிவித்துள்ளது.
இன்று (22) திங்கட்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைப் பிரேரணை மீதான வாக்களிப்பு நடைபெற உள்ளதும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல முஸ்லிம் நாடுகள் வாக்களிக்கும் தகுதியை கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.