உலக கவிதைத் தினத்தை முன்னிட்டு வெள்ளாப்புவெளி நடாத்திய கவிதை வாசிப்பும் நூல் வெளியீடும்

71

உலக கவிதைத் தினத்தை முன்னிட்டு மேமன்கவியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்.முல்லை முஸ்ரிபாவின் வரைபடமற்றவர்களின் காலடி கவிதைத் தொகுப்பின் நூலின் முதற்பிரதியினை இலக்கியப் புரவலர்  ஹாஸிம் ஒமர்  பெற்று கொண்டார்.

தொடக்கவுரையை முல்லை முஸ்ரிபா நிகழ்த்தினார்.

கெக்கிராவ ஸூலைஹாவின் மொழிபெயர்ப்பில் ஆங்கில கவிதைகள், எம்.ரிஷான் ஷெரீப்பின்;  மொழிபெயர்ப்பில் சிங்கள கவிதைகள், வாசிக்கப்பட்டன..

டாக்டர் தாஸிம் அஹமது தாட்சாயணி, முல்லை முஸ்ரிபா ஆகியோரின் தமிழ்க் கவிதைகளின் வாசிப்பு இடம்பெற்றதோடு, பலஸ்தீன், குர்திஸ்தான், பாகிஸ்தான், ஐவரிகோஸ்ட். சிலெ  போன்ற நாடுகளின்  கவிதைகளை ஆசிரியர் பரத் மற்றும் இளங்கவிஞர்களான வானம்பாடி பாத்திமா முஜா, லைலா அக்ஷயா  , ஆகியோரும், மாணவர்களான அனஸ், மிதா மர்யம், போன்றவர்கள் முன் வைத்தார்கள்.

நூல் வெளியீட்டுரையையும்  கவிதைத் தின உரையாகவும் கவிஞர் சேரன்  சிறந்த  உரையை நிகழ்த்திதனார்.. ஏற்புரையை முல்லை முஸ்ரிபா முன் வைத்தார்.