இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேறியது, அரசின் ராஜதந்திர முயற்சியிலே சற்று பின்னடைவு

20

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகள் , எதிராக 11 நாடுகளும் , நடுநிலை வகித்தன . 14 நாடுகள் என்றும் அறியக்கிடைத்திருக்கிறது .பிரதான இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கவில்லை .இதுபோன்று இந்தியா ,ஜப்பான் உட்பட பல நாடுகள் நலிவின என்ற தகவலும் வெளியாகியுள்ளது .

ஜெனிவாவில் நடந்தது என்ன ? ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் கனடா, ஜேர்மனி ,வட மஸ்ரூனியா ,மொன்ரீக்கோ ,மாலாவி மற்றும் ஐக்கிய ராஜ்யங்கள் இன்றி இலங்கைக்கு எதிராக முன்வைத்த தீர்மான வாக்கெடுப்பின் இறுதிக்கட்ட நேரத்திலும் இலங்கை அரசு தீவிர ராஜதந்திர காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருந்தது . குறிப்பாக இந்தோனேசியா, பஹ்ரைன் போன்ற நாடுகளோடு பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும் இறுதியில் அது தோல்வியில்தான் முடிவடைந்தது .

46ஆவது ஜெனிவா மனித உரிமைகள் மகாநாட்டை பொறுத்தவரையிலே மொத்தமாக மனித உரிமைகள் பேரவையிலே 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன . இந்த 47 நாடுகளுள் 11 நாடுகள் முஸ்லீம் நாடுகள் ஆகும் .முஸ்லீம் நாடுகளுள் 4 நாடுகள் மட்டுமே இந்த பேரணைக்கு எதிராக அதாவது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன .அவை பாகிஸ்தான் ,பங்களாதேஸ் ,சோமாலியா மற்றும் உஸ்பெகிஷ்டான் ஆகிய நாடுகளாகும் .7 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.