விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா

83

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை அதிகரித்து வரும் நிலையில் யாழ். கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் இன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு மூடப்படுகின்றன என்று யாழ். மாவட்ட அரச அதிபரும் மாவட்ட கொரோனாத் தடுப்புச் செயலணியின் தலைவருமான க.மகேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ். மாவட்ட அரச அதிபர் ஆகியோர் ஆராய்ந்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தற்போதுள்ள இடர் காலத்தைக் கருத்தில்கொண்டு இன்றிலிருந்து எதிர்வரும் 4ஆம் திகதி வரை யாழ். கல்வி வலயப் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுகின்றன என்று யாழ். மாவட்ட அரச அதிபர் மேலும் கூறியுள்ளார்.