வழமைக்கு திரும்பும் ”Ever Given”

55

ஒரு வாரமாக எகிப்தின் சுயேஸ் கால்வாயை மறித்துக் கொண்டிருந்த “Ever Given” கப்பல் ஓரளவுமாற்றபட்டுள்ளது. சுயேஸ் கால்வாய் ஆணையம் (SCA) பரபரப்பான நீர்வழிப்பாதை விரைவில் மீண்டும் வழமைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை எழுவதாக அறிவித்துள்ளது.

கப்பல் சரியான பாதைக்கு 80 சதவீதம் மாற்றப்பட்டுள்ளதாகவும் முன்னர் கரையிலிருந்து 4 மீட்டர் தொலைவில் இருந்ததை ஒப்பிடுகையில் 102 மீட்டர் தற்போது நகர்ந்துள்ளதாக சுயேஸ் கால்வாய் ஆணையகத்தின் தலைவர் ஒசாமா ரபீஃ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

400 மீட்டர் (1,312 அடி) நீளமான “Ever Given)” கப்பல் சென்ற செவ்வாய்க்கிழமை(23/03/2021) அதிகாலை அதிக காற்றின் காரனாம கால்வாயின் தெற்குப் பகுதி முழுவதும் குறுக்காக சிக்கியது. இதன் காரணமாக ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான மிகக் குறுகிய கப்பல் பாதையில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

குறித்த கப்பலின் உரிமையளரின் ஊடகப் பேச்சாளர், கப்பலின் முகப்பில் சிறிய பாதிப்பு அது சிக்கிக்கொண்டபோது ஏற்பட்டுள்ளதாகவும் புதிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

திங்கள் கிழமை வரை(29/03/021) சுமார் 367 கப்பல்கள் இதன் மூலம் குறித்த பாதையில் தடைப்பட்டுள்ளன.

மூலம்அல்ஜஸீரா