கொழும்பில் நேற்று நடந்த கொடூர செயல்; நடந்தது என்ன? முழு விபரம் இதோ…..

68

பன்னிபிட்டி பகுதியில் லொறி சாரதி ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வீதியில் வைத்து, நபர் ஒருவரை ஆவேசகமாகவும், கொடூரமாகவும் தாக்கும் வீடியோ காட்சியொன்று நேற்று (29) சமூக ஊடகங்களில் வைரலாக பரவியிருந்தது.

ஹைலெவல் வீதியின், மஹரகம – பன்னிபிட்டி பகுதியில் வைத்து இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் லொறியொன்றின் சாரதி ஒருவர் இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியிருந்தார் என்பதோடு, தாக்குதலை மேற்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மஹரகம பொலிஸ் நிலையத்தில் பணிபுரிபவர் எனத், தெரியவந்தது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், வீதியில் வைத்து சாரதியை தாக்கி தரையில் தள்ளிவிட்டு, பின்னர் சாரதியின் உடலில் ஏறி குதிக்கும் காட்சிகள், குறித்த வீடியோவில் பதிவாகியிருந்தது.

மஹரகம பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி மீது குறித்த லொறி மோதி விபத்துக்குள்ளானதன் காரணமாக, இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் குறித்த பொலிஸ் அதிகாரி, களுபோவில மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் தாக்குதலை மேற்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகரவின் உத்தரவுக்கமைய, நேற்றையதினம் (29) பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இன்று(30) காலை குறித்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை இன்று(30) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான சாரதி யார் என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய பண்டாரவளையில் இருந்து மரக்கறி வகைகளை லொறியில் ஏற்றி கொண்டு நேற்று (29) கொழும்பு சென்ற அப்புத்தளையை சேர்ந்த 24 வயதான க.பிரவின் என்றும் தெரியவந்துள்ளது.