காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு
காத்தான்குடி மீடியா போரத்தின் வருடாந்த பொதுச்சபைக்கூட்டம் 04.04.2021 போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தன்னுடைய தலைமைக்காலத்தில் தனக்கு ஒத்துழைத்தமைக்காக மீடியா போரத்தின் சகல உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தனதுரையில் தெரிவித்தார்.
காத்தான்குடி மீடியா போரத்தின் புதிய தலைவராக ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.சஜி தெரிவு செய்யப்பட்டதோடு செயலாளராக மீண்டும் எம்.ரீ.எம்.யூனுஸ் அவர்களும், பொருளாளராக எம்.கே.பழீலுர்ரஹ்மான் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
உப தலைவர்களாக எம்.எஸ்.எம்.நூர்தீன் மற்றும் எம்.ஐ.அப்துல் நஸார் ஆகியோர் தெரிவுசெய்யபட்டதுடன் தகவல் பணிப்பாளராக எம்.பஹத் ஜுனைட் அவர்களும் உதவிச் செயலாளராக ஏ.எல்.ஆதிப் அஹமட் அவர்களும் தெரிவு செய்யபட்டனர்.
இதன்போது காத்தான்குடி மீடியா போர அங்கத்தவர்களுக்கான ஊடக அடையாள அட்டை வழங்கி வைக்கப்பட்டது.
இதன் பின்னராக புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட எம்.எஸ்.எம்.சஜி அவர்கள் தனதுரையில் தன்னை தலைவராக தெரிவு செயதமைக்காக உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுக்க ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் எனவும் தனதுரையில் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.