பிக்குகள் குழுவினர் காத்தான்குடிக்கு நாளை விஜயம்

42
ஊடவியலாளர்
ஏ.எல்.டீன் பைரூஸ்.
நல்லென்ன நோக்குடன்
பிக்குகள் குழுவினர்  நாளை
காத்தான்குடிக்கு சிறப்பு மிக்க விஜயம்  ஒன்றினை
மேற்கொள்ள உள்ளனர்.
கொழும்பு தெஹிவளை பிரேதேசத்தில் அமைந்துள்ள  “ஸம் ஸம்”  நிறுவனத்தின் ஒருங்கிணைப்பினூடாக வெள்ளவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள
“அமரபுர நிகாய” எனும் நிகாய பீடத்தை சேர்ந்த முக்கிய பௌத்த குருமார்களை உள்ளடக்கிய குழுவினர் நாளை  (08.04.2021 வியாழன்) காத்தான்குடிக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
காத்தான்குடிக்கு வருகை தரவுள்ள மேற்படி குழுவினர்
பள்ளிவாயல்கள்,  பாடசாலைகள். அரபு மதரசாக்கள் என  பல இடங்களைப்  பார்வையிட இருப்பதுடன் பள்ளிவாயல்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பல  பிரதிநிதிகளுடனும்  முக்கிய கலந்துரையாடல்களிலும்
ஈடுபட உள்ளதாகவும்
ஏற்பாட்டாளர்கள் இதன்போது
தெரிவித்தனர்.