கைதிகள் 16 பேருக்கு கொரோனா

56

திருகோணமலை பொது வைத்தியசாலையில்   மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலை கைதிகள் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக திருகோணமலை பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக சிறைக்கைதிகள் ஐவருக்கு, கடந்த வெள்ளிக்கிழமை (02) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் மேற்படி அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில், கடந்த மூன்று தினங்களில்  திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  21 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளனர் என திருகோணமலை பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, கோதுமை ஆலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என அன்டிஜன் பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.