கம்பளை நாவலப்பிட்டி விபத்தில் இருவர் உயிரிழப்பு

50

கம்பளை நாவலப்பிட்டி வீதியில் ஜமியா புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் .

17 மற்றும் 21 வயதினை உடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர் . நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் வண்டி ஒன்று எதிர் திசையில் வந்த மேட்டர் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது .

சம்பவத்தில் மூவர் காயமடைந்ததுடன் மூவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் .

எனினும் பலத்த காயங்களுக்குள்ளான 17 மற்றும் 21 வயதினை உடைய இருவர் உயிரிழந்துள்ளனர் .

இதேவேளை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றே விபத்தில் 37 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார் .

யாழ்ப்பாணம் நாவலர் வீதி பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற விபத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் .

இதனிடயே நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்றே வாகன விபத்துக்களில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 14 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர் .

24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்றே விபத்துக்களில் 74 பேர் காயமடைந்துள்ளனர் .

இந்த காலப்பகுதியில் 121 வாக்கங்கள் விபத்துக்குள்ளாகின .இவற்றில் 12 வாகன விபத்துக்கல் அதிவேக வீதிகளில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது .

அதிக வேகம் மற்றும் மது போதையில் வாகனம் செலுத்தியதாலேயே அதிக விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .