மகிழ்ச்சியும் உளநலமும்

87

உளநலத்தின் பிரதான குறிகாட்டிகளில் ஒன்று மகிழ்ச்சி யாகும். அது பல்வேறு காரணிகளில் தங்கியுள்ளது. அக்காரணிகளில் சில நமது கட்டுப்பாட்டில் உள்ளவை; சில நமது கட்டுப்பாட் டிற்கு அப்பாற்பட்டவை. மகிழ்ச்சியை அடைய நம்மால் என்ன செய்ய முடியும் என்பதிலும் சில வரையறைகள் இருக்கவே செய்கின்றன.

எல்லா மனிதர்களும் ஒரே அளவு மகிழ்ச்சியை அனுபவிப்ப வர்கள் அல்லர். சிலர் அதிகம் மகிழ்ச்சியானவர்களாகவும் சிலர் மகிழ்ச்சியை குறைந்தளவில் அனுபவிப்பவர்களாகவும் உள்ளனர். சிலர் மகிழ்ச்சியானவர்கள் போன்று தோன்று கின்றனர். வெளிப்பார்வைக்கு அப்படித் தோன்றினாலும் உள்ளார்ந்த மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிக்கவில்லை.

மகிழ்ச்சி பற்றிய ஆய்வுகள் அதில் செல்வாக்குச் செலுத்தும் உள்ளார்ந்த மற்றும் வெளியார்ந்த காரணிகளை அடையாளப் படுத்தியுள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு.

  1. பரம்பரைக் காரணிகள் (Genetic Factors)

மகிழ்ச்சி ஒரு நேர்ப்பாடான மனவெழுச்சியாகும். குறிப்பிடத் தக்க அளவு மகிழ்ச்சி உணர்வுடன் சிலர் பிறக்கின்றனர். பரம்பரைக் காரணிகளோடு மகிழ்ச்சி தொடர்புறுகின்றது. இவ்வாறான மனவெழுச்சிப் பண்பு தற்காலிக காரணிகளால் தடைப்படலாம். ஆனால், அது ஒரு பொழுதும் மாற்றமடைவ தில்லை.

  1. ஆரோக்கியம் (Health)

மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் இடையில் ஒரு தெளிவான தொடர்பு உள்ளது. மகிழ்ச்சியான மனிதர்கள் ஆரோக்கியமாகவும் ஆரோக்கியமான மனிதர்கள் மகிழ்ச்சி யாகவும் உள்ளனர். நேர்மறையான மனவெழுச்சி உள்ளவன் குறைவாகவே வைத்தியசாலை வாசலைத் தரிசிக்கின்றான். அதிலும் மகிழ்ச்சியானவன் நோய்த் தாக்கங்களுக்கு உட்படுவது குறைவாகும். மாரடைப்பு, பக்கவாதம் என்பன அவனை இலகுவில் தாக்குவதில்லை.

  1. சமூக வாழ்வு (Social Life)

உற்சாகமான சமூக வாழ்க்கைக்கும் மகிழ்ச்சிக்கும் இடையில் நெருங்கிய தொடர்புள்ளது. நல்ல வெற்றிகரமான நண்பர்கள், சந்தோசமான திருமண வாழ்வு, சமூகப் பணிகளில் பங்கேற்பு போன்ற சக மனிதர்களுடனான நெருங்கிய உறவு மகிழ்ச்சியில் செல்வாக்குச் செலுத்துகின்றது.

  1. தொழில் வாழ்வு (Work Life)

திருப்திகரமான தொழில் அல்லது உத்தியோகம் ஒருவரது மகிழ்ச்சியில் குறிப்பிட்டளவு செல்வாக்கை கொண்டுள்ளது. தொழிலின் இயல்பு மற்றும் திருப்தி நல்ல மனப்பாங்கையும் மனவெழுச்சியையும் தருகின்றது. தீர்மானம் எடுப்பதற்கான உரிமை, சுயாதீனம், சுதந்திரம் போன்றவை தாராளமாகக் காணப்படும் தொழில் மகிழ்ச்சிக்கான விழுமியங்களைத் தருகின்றது.

  1. சமூகக் காரணி (Social Factor)

ஒருவரது மகிழ்ச்சியில் வயது, பால்நிலை, இனம் போன்ற காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றன. எனினும், இவற்றின் தாக்கம் வரையறுக்கப்பட்டவை. இளமையில் உற்சாகம், உடற் பலம், தைரியம் என்பன அதிகமாக இருக்கும். அவை மகிழ்ச்சிக்கு வழிகோலும். வயது செல்லச் செல்ல இக்காரணிகள் குறைவடையும்போது மகிழ்ச்சிக்குரிய வாய்ப்புக்கள் குறைகின்றன.

  1. பணம் (Money)

பணம் குறிப்பிடத்தக்களவு மகிழ்ச்சியில் செல்வாக்குச் செலுத்துகின்றது. பணத்தைத் தேடுவதற்கான எல்லை கடந்த உழைப்பு மகிழ்ச்சியை சிதறடிக்கின்றது. ஏனெனில், பணத்தை முகாமை செய்வதிலேயே முழுக் கவனமும் குவியும்போது பணமே கவலையின் பிறப்பிடமாகி விடும். பணத்தை முகாமை செய்வதும் ஏனையவற்றுக்கும் அதற்கும் இடையில் சமநிலை பேணுவதும் முக்கியம்.

  1. மனப்பாங்கு (Attitude)

எமது சிந்தனைகள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், மனப்பாங்குகள் எமது மகிழ்ச்சி உணர்வுடன் நெருக்கமான தொடர்புள்ளவை. மகிழ்ச்சியான மனிதர்கள் எப்போதும் நேர்ப்பாங்காக சிந்திக்கின்றவர்கள். எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருக்கின்றவர்கள், தன்னம்பிக்கை உள்ளவர்கள். சொந்த அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்பவர்கள்.

  1. கட்டுப்பாட்டு உணர்வு (Sense of Control)

யாரும் தனக்கு உதவவில்லை அல்லது தான் ஒரு அநாதரவாளன் என மனிதன் உணரும்போது அவன் ஏனைய மனிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளான் என்றே அர்த்தம். சுயாதீனம், சுதந்திரம், தீர்மானிக்கும் உரிமை, நமது கனவுகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தீர்மானமெடுக்கும் சுதந்திரம், இவற்றிலிருந்துதான் மகிழ்ச்சி வருகின்றது. பிறரில் முற்றிலும் தங்கியிருப்போர் மகிழ்ச்சியானவர்களாக இருப்பதில்லை.

  1. வெற்றி (Success)

கோட்பாட்டின்படி வெற்றி பெற்றவர்கள் மகிழ்ச்சியாளர்கள். மகிழ்ச்சியான மனிதர்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றவர்கள். ஆயினும், வெற்றி பெற்றோர் அனைவரும் மகிழ்ச்சியாளர்களா? வெற்றி பெறுதல் என்றால் என்ன? என்பதெல்லாம் சிக்கலான கேள்விகளே. ஒருவரது மனப்பாங்கைப் பொறுத்து வெற்றி மகிழ்ச்சியைத் தீர்மானிக்கலாம்.