யார் இந்த மர்ஹும் டீன் பாஸ் மாமா?

101

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வளர்த்த அதேவேளை, ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பிய மாமனிதர் மர்ஹும் டீன் பாஸ் மாமா

அனைவராலும் டீன் பாஸ் மாமா என அன்புடன் நினைவு கூறப்படுகின்ற இந்த மாமனிதர் மரணமாகி 40 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.

முதல் தலைமுறை முஸ்லிம்களில் ஒருவராக நினைவு கூரப்படும் இவர், கொழும்பில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அன்று பிரபலமற்ற சிறிய கிராமமான, குக்கிராமமான மஹரகமவில் வாழ்ந்து வந்தார்.

ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பிய ஒரு மாமனிதராக டீன் பாஸ் மாமா முஸ்லிம்களால் நினைவு கூரப்படுகின்றார். அதேவேளை, பமுனுவ வீதி மஹரகமவில் உள்ள கபூரியா அரபுக்கல்லூரியினை என்.டீ.எச். கபூர் ஹாஜியார் நிறுவினார்.

உண்மையில் கபூர் ஹாஜியாருக்குப் பின்னர் இலங்கையின் ஒரு பகுதியில் முஸ்லிம்களின் முதல் தோற்றம் என இது கூறப்படுகிறது. அன்று கபூர் ஹாஜியார் ஒரு தன்னலமற்ற கொடை வள்ளலாக இருந்தார். அவர் கபூரியா அரபுக்கல்லூரியை உருவாக்கியதுடன் ஒரு காணியை கிறிஸ்தவ பிள்ளைகளுக்கான அநாதை இல்லத்துக்கு வழங்கினார். இது அவரது ஈகைத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. மறைந்து பல வருடங்கள் கடந்தும் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார்.

இதுதவிர, அன்று மஹரகம வர்த்தக சமூகம் மத்தியில் பாணந்துறை முஸ்லிம்கள் ஏகபோகச் செல்வாக்குச் செலுத்தினர். மறைந்த முஸம்மில் ஆலிம் தந்தைக்குச் சொந்தமான ‘ஆலிம் சாஹிப் கடை’ அன்று மஹரகமவில் பிரதானமான வன்பொருள் கடையாக (ஹார்ட்வெயார் ஷொப்) இருந்தது. அந்தக் கடை தற்போது அங்கு இல்லை. அன்று மஹரகமவில் பிரபல்யம் பெற்ற புடவை கடையான ‘ரஹுமான் ஸ்டோர்ஸ்’ இன்றும் அங்கு காணப்படுகின்றது. அவர்கள் இன்றும் சிறந்த புடவை மற்றும் துணி விற்பனையாளர்களாகக் காணப்படுகின்றனர். இப்ராஹீம் ஹாஜியாரின் இரும்புக் கடை கூட இன்று அங்கு இல்லை. அஹமட் செயினுலாப்தீன் காலத்தில் மஹரகம பகுதியில் இருந்த முஸ்லிம்கள் இவர்கள் மாத்திரமே!

அஹமட் லெப்பை ஜெய்னுலாப்தீன் எல்லோராலும் அன்புடன் டீன் பாஸ் மாமா என அன்புடன் நினைவு கூரப்படுகின்றார். ராஜவம்சம் என அழைக்கத் தகுதி பெற்ற ஒரு தேச பக்தராக அவர் இருந்தார். அவர் 1936 ஆம் ஆண்டு பமுனுவ வீதி மஹரகமைக்கு குடிபெயர்ந்தார்.

டீன் பாஸ் மாமா மார்க்க சூழலில் மார்க்கப்பற்றுள்ள பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை காலஞ்சென்ற அஹமத் லெப்பை ஆவார். அவருடைய பாட்டனார் காலம் என்ற சிறாய் லெப்பை ஆவார். அந்தக் காலத்தில் அவர்கள் கொள்ளுப்பிட்டி ஆலிம்கள் என அறியப்பட்டவர்கள்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையம் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள டீன் பாஸ் மாமாவின் பாட்டனாருக்குச் சொந்தமான கட்டிடத்தில்தான் நீண்ட காலமாக பிரித்தானிய தூதுவராலயம் இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பீரங்கிகள் அப்பிரதேசத்தை நோக்கி வைக்கப்பட்டிருந்ததனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அன்றைய அரசாங்கத்தினால் அந்தக் கட்டடம் வாங்கப்பட்டது. அதற்கு நஷ்ட ஈடாக கொள்ளுப்பிட்டி முகாந்திரம் வீதியில் ஒரு காணியை பிரித்தானிய அரசாங்கம் வழங்கியது. அனேகமாக டீன் பாஸ் மாமா அங்குதான் பிறந்தார்.

இது தொடர்பிலான எதுவிதமான பதிவுகளையும் என்னால் சேகரிக்க முடியவில்லை. ஆனால், அங்கு வைக்கப்பட்டிருந்த பீரங்கிகள் இன்னும் அங்கேயே காணப்படுகின்றன என 1989 ஆம் ஆண்டு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

1888ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டியில் பிறந்த ஸெய்னுலாப்தீன் என பெற்றோரால் பெயரிடப்பட்ட டீன் பாஸ் மாமா தனது முதிர்ந்த 92ஆவது வயதில் இறையடி எய்தினார்.

ஸெய்னுலாபுதீன் என்ற இயற்பெயர் கொண்டிருந்த போதிலும் அவர் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் டீன் பாஸ் மாமா என உரிமையுடனும் அன்புடன் அழைக்கப்பட்டார்.

பலராலும் விரும்பப்படுகின்ற இந்த கனவான், எந்தவொரு பாடசாலைப் படிப்பையைபோ, கல்லூரிப் படிப்பையையோ மேற்கொண்டதில்லை.

அவர் தனது தந்தையும் பாட்டனாரும் கற்பித்த மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்றார். அங்கு அவர் தமிழ் மொழியை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். அத்தோடு, அல்-குர்ஆனை தஜ்வீத் சட்டத்துடன் ஓதவும் இஸ்லாம் பற்றிய தெளிவினையும் அவர் அங்கு பெற்றுக்கொண்டார்.

அன்று தனது ஆண் மக்கள்,
தற்செயலாக அன்று பிரபல்யம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பிச்சையின் 8 மகள்களையும் திருமணம் செய்து, கொள்ளுப்பிட்டி பாஸஸ் சமூகத்தில் வாழ்ந்து வந்த டீன் பாஸ் மாமா, சகல கொள்ளுப்பிட்டி பாஸஸ்களும் அன்று உத்தியோகம் செய்து வந்த துறைமுக வேலைவாய்ப்புக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டிருந்தார். அன்று மக்கள் வாப்புச்சி மரிக்காரை நேசித்த காலமாகச் சொல்லப்படுகின்றது. அவரும் கொள்ளுப்பிட்டி பாஸஸ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவராவார். வாப்புச்சி மரிக்கார் ஒரு சிறந்த வடிவமைப்பாளராகவும் ஒப்பந்தக்காரராகவும் இருந்தார்.

ஆகவே, ஒரு சிறுவனாக டீன் பாஸ் மாமா அவரது ஓய்வு நேரங்களையும் இடைப்பட்ட நேரங்களையும் நிர்மாணத் துறையில் உள்ள நுட்பங்களையும் கற்றுக்கொள்ளப் பயன்படுத்தினார். இவை அவரது மத்ரஸா கல்விக்கு இடையூறு ஏற்படாத வகையில் மேற்கொண்டிருந்தார்.

சகல துறை விற்பன்னர்

அவர் ஒரு கொத்தனாராகவும், தச்சராகவும், ஓடுகள் வேய்பவராகவும், அரிகல்லடுக்கி (செங்கல் அடுக்குபராகவும்) இவையனைத்தும் அவருக்குள் ஒன்றாக வடிவமைத்திருந்தது. ஒருவர் அவரை சகலதுறை விற்பன்னராகக் கூறலாம். என்னைப் பொறுத்தவரையில் அவர் எல்லாவற்றிலும் ஜாம்பவனாகத் திகழ்ந்தார்.

டீன் பாஸ் மாமா அவரது சொந்தப் பாணியில் கட்டட அமைப்புகளை வடிவமைத்து அதனை வரைவது மிகவும் அற்புதமாக இருக்கும்.

பொறியியலாளர்கள் அமர்ந்து கொண்டு தூண்களின் மற்றும் உத்தரங்களினதும் அளவையும் பலகைகளின் எண்ணிக்கையையும் உரிய திருத்தங்களை மேற்கொள்வதற்காக அவர்களது அளவு கருவிகளை அவர்களது சருக்கு சட்டங்கள் மீது நகர்த்திக்கொண்டு பிந்திய இரவினை கழித்துக் கொண்டிருந்த வேளையில், டீன் பாஸ் மாமா மிகவும் சாதாரணமாக உத்தரம் தூண்கள் மற்றும் ஸ்லெப்கள் அது எதுவாக இருந்தாலும், தனது மனத்தினால் கணித்து முடிப்பார். டீஸ் பாஸ் மாமாவின் கணிப்பீடுகள் மிகவும் சரியாக இருந்ததாக பொறியியலாளர் ஒருவர் ஒருமுறை பாராட்டியிருந்தார். அவ்வாறான வடிவமைப்புகளை செய்கின்ற போது பொறியியலாளர்களால் பயன்படுத்தப்படுகின்ற ஒரு கட்டமைப்பின் முறிவு அழுத்தத்தின் விகிதத்தினை கணிப்பிடுகின்ற முறைக்குச் சமமானதாக டீன் பாஸ் மாமாவின் திட்டங்கள் காணப்பட்டுள்ளன. நிர்மாணத்துறையின் சகல அம்சங்களிலும் அறிவைப் பெற்றுக் கொண்டு, அந்த நேரத்தில் பொதுவாக இருந்தது போல அவர் கொழும்பு துறைமுகத்தில் வேலை வாய்ப்பைப் பெற்றார். அவரது வலிமை பிரித்தானிய பொறியியலாளர்களால் அவதானிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அத்தோடு, டீன் பாஸ் மாமாவுக்கு தலைமை கொத்தனார் பதவியினை பிரித்தானிய பொறியியலாளர்கள் வழங்கினார்கள்.

அது அநேகமாக அங்கு நீண்ட காலமாக தலைமைக் கொத்தனாராக இருந்த முகம்மது இஸ்மாயில் என்பவரை ஊக்கப்படுத்தியது.

அவர் செய்க் பரீட் குடும்பத்திலிருந்து றுகையா உம்மா என்பவரைத் திருமணம் முடித்திருந்தார். அவரது மகள் லைலா உம்மாவின் கரத்தினை திருமண பந்தத்தினூடாகப் பிடித்துக் கொடுக்க சேர். ராசிக் பரீதின் முன்னோடிகளாக இருந்தார்.

கொழும்பு துறைமுகத்தில் ஒரு கட்டட ஒப்பந்தக்காரராக ஆகுவதற்கு அன்றைய பிரித்தானிய பொறியியலாளர்களால் வழங்கப்பட்ட இடைவெளியினை டீன் பாஸ் மாமா அடிக்கடி நினைவு கூரிக் கொள்வார். வெளிப்படையாக அன்று கடல் நடுவில் ஒரு வெளிச்ச வீட்டைக் கட்ட ஒரு சரியான ஒப்பந்தகாரரைத் தேடிக்கொள்ள அன்றைய துறைமுக அதிகாரிகளால் முடியாமல் போனது. (இடம் எனக்கு சரியாக தெரியாது)

வளங்களை ஒன்றுதிரட்டி குறிப்பிட்ட வெளிச்ச வீட்டினை கடல் நடுவில் நிர்மாணிக்கத் தயாராகவுள்ள எந்தவொரு தலைமை கொத்தனாருக்கும் கவர்ச்சிகரமான பணப் பரிசுகளை தாம் வழங்குவதாக அன்றைய துறைமுக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இப்படிப்பட்ட ஒரு பெரிய பொறுப்பினை ஏற்க ஏனைய தலைமைக் கொத்தனார்கள் தயங்கிய வேளை, டீன் பாஸ் மாமா அதனைத் துணிச்சலுடன் ஏற்றுக்கொண்டு, அப்பொறுப்பினை கையில் எடுத்துக் கொண்டு ஒரு வசதியான பொதியை உருவாக்கியிருக்கலாம்.

இந்தத் துணிகர முயற்சியால் ஊக்கமூட்டப்பட்டார். அவர் ஒரு கட்டட ஒப்பந்தகாரராகவும் மாறினார். அத்தோடு, பொதுவேலைத் திணைக்களத்தில் ஒருவராகவும் தன்னைப் பதிவு செய்துகொண்டார்.

பதிவு செய்யப்பட்ட கட்டட ஒப்பந்தக்காரர் என்ற வகையில் அன்றைய பிரபலங்களாகக் காணப்பட்ட சீ. ஹரிஸ், வீ.டி. கெஸ்டர், டாக்டர் ஹுல் போன்றவர்களுக்காக கட்டடங்களை டீன் பாஸ் மாமா நிர்மாணித்தார்.

கொழும்பில் அரசு கட்டடங்களின் பராமரிப்பு ஒப்பந்தகாரராக டீன் பாஸ் மாமா மிக நீண்ட காலமாகச் செயற்பட்டார். செனட் கட்டடம், பொது தபால் அலுவலகம், பாராளுமன்ற கட்டடம்,
சிராவஸ்தி
என்று அழைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுதி டீன் பாஸ் மாமாவினால் பராமரிக்கப்பட்ட கட்டடங்களில் சிலவாகும்.

இக்காலப்பகுதியில் தொழில் அமைச்சர் ஜோன் கொத்தலாவல, பொலிஸ்மா அதிபர் ரிச்சர்ட் அலுவிஹார போன்றோர் இவரது விஷேட நண்பர்களாகக் காணப்பட்டனர். இது அவரது அபார திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமாக காணப்பட்டது. எந்தவிதமான முன் அனுமதியும் இன்றி டீன் பாஸ் மாமா இவர்களைச் சந்தித்து வந்துள்ளார். ஒருமுறை சேர். ஜோன் கொத்தலாவலையை சந்திக்க டீன் பாஸ் மாமா சென்ற போது நான் அவருடன் சென்றிருந்தேன். அங்கு சீருடையில் காணப்பட்ட அதிகாரியை பொருட்படுத்தாது, எவ்வித இடையூறும் இன்றி கொத்தலாவலையின் அறைக்குள் சென்றுவிட்டார்.

ஒருமுறை சேர். ஜோன் கொத்தலாவலை தனது மதிய உணவை நிறுத்தி விட்டு, டீன் பாஸ் மாமாவினால் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை விசாரிப்பதற்காகச் சென்றுள்ளார். இதன் மூலம் இந்த மாமனிதரின் புகழை அனைவரும் விளங்கிக் கொள்ள முடியும். டீன் பாஸ் மாமா தனது செல்வாக்கை தனது தனிப்பட்ட தேவைகளுக்காக ஒருபோதும் பயன்படுத்தியதில்லை.

மஹரகமவுக்கு இடம்பெயர்தல்

டீன் பாஸ் மாமா 1936 ஆம் ஆண்டு மஹரகமவுக்கு இடம்பெயர்ந்தார். கபூரியா அரபுக்கல்லூரி அங்கு காணப்பட்டதனால் அவர் மேலும் உற்சாகமடைந்தார். பமுனுவ பகுதியில் ஒன்றரை ஏக்கர் காணியினை விலை கொடுத்து வாங்கினார். இதுவே மஹரகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது முஸ்லிம் குடியேற்றமாகும்.

அவரது பிள்ளைகளுடனும் மனைவியுடனும் மூத்த மைத்துனர் அப்துல் கபூர் தனிமையாக குடிபெயர்ந்த போதிலும் அவர் ஒரு சிறந்த குடும்பத் தலைவராக காணப்பட்டார். அத்தோடு, அவரைச் சுற்றி ஒரு பெரிய மக்கள் கூட்டம் இருப்பதை அவர் விரும்பினார். அதேபோல, குடும்ப வழக்கப்படி, ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையிலும் சிறுவர்களை திரட்டிக்கொண்டு ஹத்தாத் ராத்திப் வாசிப்பார். தவறாமல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையில் இமாம் பூஸரி (ரஹ்) அவர்களின் புர்கா ஷரீபை வாசிப்பார். ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்துக்கு முந்திய கடைசி ஞாயிற்றுக்கிழமை நாளன்று சிறப்பான கந்தூரி விருந்துடன் நிறைவு பெறுவது டீன் பாஸ் மாமாவின் வாழ்வில் முக்கிய நிகழ்வாகக் காணப்பட்டது.

இஸ்லாமிய தார்மீகத்தையும் இஸ்லாத்தையும் பற்றி ஏனையவர்களுக்கும் எத்தி வைக்கும் நோக்கில் டீன் பாஸ் மாமா நெருங்கிய உறவினர்களுக்கும் நண்பர்கள் நலன்விரும்பிகள் போன்றோருக்கு அழைப்பு விடுப்பார். இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு அதனை விளக்குவது சாலச் சிறந்ததாகும். இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை வளர்ப்பதில் டீன் பாஸ் மாமா அளப்பரிய சேவையாற்றினார். அவர் எந்த சமூகத்தையும் ஒதுக்கவும் இல்லை, புறக்கணிக்கவும் இல்லை. முஸ்லிம்கள், சிங்களவர்கள், இந்துக்கள் என எவரேனும் அவரிடத்தில் உதவி கேட்டுச் சென்றால் மறுக்காமல் செய்து வந்தார்.

அவரது நாட்களில் மக்கள் கூறுகின்ற எதனையும் பொருட்படுத்தாது, வெசாக் நிமித்தமாக ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதான சாலைகளுக்கு ஒரு பூசல் அரிசியினை அன்பளிப்பாக வழங்கி வந்தார். மஹரகம பகுதியில் வெசாக் கொண்டாட்டங்களின் போது வெசாக் பந்தல்களை அமைப்பதற்கு பண உதவிகளையும் டீன் பாஸ் மாமா வழங்கி வந்தார்.

அதனைக் கண்ணியப் படுத்தும் முகமாக அன்றைய பௌத்த பக்தர்கள் முதலாவது வெசாக் தோரணத்துக்கு ஒளியேற்ற டீன் பாஸ் மாமாவுக்கு முதலாவதாக அழைப்பு விடுப்பார்கள்.

கிருலப்பனை மற்றும் காஸ்வேர்க் வீதி கிறிஸ்தவ தேவாலயங்கள் டீன் பாஸ் மாமாவினால் எதுவித இலாபமும் பெறாமல் செய்து கொடுக்கப்பட்டன.

முன்னாள் நீதிபதி குரொஸ்ஸெட் தம்பையா ஒரு நேரம் கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அதிபர் சின்னத்துறை ஆகியோர் இந்து சமய நிகழ்வுகளின்போது டீன் பாஸ் மாமாவின் உதவியை நாடி உள்ளனர். முஸ்லிம் வணக்கஸ்தலங்களிடையே கொள்ளுப்பிட்டி ஜும்ஆப்பள்ளி, முகத்துவாரம் ஜும்ஆப் பள்ளி, காத்தான்குடி மெத்தைப் பள்ளி, பம்பலப்பிட்டி ஜும்ஆப் பள்ளி, மட்டக்களப்பு டவுன் பள்ளி டீன் பாஸ் மாமாவின் உதவி பெற்ற முஸ்லிம் பள்ளிகளில் சிலவாகும்.

மஹரகம அஸ்ஹர் பிளேசில் உள்ள அஸ்ஹரியா பள்ளிவாசல் டீன் பாஸ் மாமாவின் நினைவுத்தூபியாக எழுந்து நிற்கின்றது.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் தொடக்கத்தில் ஜப்பானிய குண்டுத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு பெற அபயம் தேடிய கொழும்பு முஸ்லிம்களுக்கு டீன் பாஸ் மாமாவின் மஹரகம சொத்து அடைக்களம் வழங்கியது.

இந்த மாமனிதரின் தயாளன் தன்மையை மக்கள் நன்குணர்ந்திருந்ததனால் மக்கள் எவ்வித அச்சமுமின்றி அங்கு ஒன்று திரண்டனர். அவர் அப்பொழுது கட்டட நிர்மாணிப்பாளராக பணிபுரிந்தார். கிடுகால் வேயப்பட்ட வீடுகளையும் தங்குமிட வகை வீடுகளையும் அம்மக்களுக்கு அவர் வழங்கினார். இது அவர்களுக்கு சொந்த வீடுகளில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது.

மஹரகம பமுனுவ வீதியை தங்களது இருப்பிடமாகத் தெரிவு செய்து கொண்ட, மீண்டும் கொழும்பு திரும்ப முடியாத அவரது நேரடி குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கான வீடுகள் பின்னரே அமைக்கப்பட்டன. இந்த வகையிலேயே முதலாம் தலைமுறை முஸ்லிம் குடியிருப்பாளர்கள் மஹரகமவில் உருவாக்கினர்.

டீன் பாஸ் மாமாவுக்கு எட்டுப் பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் 5 பேர் ஆண் பிள்ளைகளாவர். பாஸ் மாமாவின் புதல்வர்களில் ஒருவர் முன்னரே இறந்துவிட்டார். ஏனைய நான்கு ஆண் மக்களில் மூவர் சிறந்த நிர்மாணத்துறை விசேட நிபுணர்களாகக் காணப்பட்டனர். தொடக்கத்தில் டீன் பாஸ் மாமாவே இவர்கள் அனைவரையும் பயிற்றுவித்தார். அவரது மூத்த மகன் சஹீட், இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது இலங்கை சமிக்ஞைகள் கூட்டுத்தாபனத்தில் காவல் அதிகாரியாகச் செயற்பட்டார்
அவர் ஒரு திறமைமிக்க அளவு கணக்கெடுப்பாளராகவும் (குவாண்டிடி சேவேயர்) மதிப்பீட்டாளராகவும் காணப்பட்டார். அவரிடம் எதுவித சான்றிதழ்களும் காணப்படவில்லை. தந்தையான டீன் பாஸ் மாமாவிடம் பெற்றுக்கொண்ட பயிற்சி மாத்திரமே அவரை இந்த நிலைக்கு கொண்டு சென்றது.

அவரது இரண்டாவது மகன் மேஜர் மசூத், இராணுவத்தின் மருத்துவ படையில் கடமையாற்றினார். அவர் கட்டடக் கட்டுமானத்தின் பாரம்பரிய வர்த்தகத்தை தொடரவில்லை.

அவரது கடைசி மகன் நான்தான். டீன் பாஸ் மாமாவும் அவரது மனைவியும் நான் இதனைத் தொடர்வதை விரும்பவில்லை. ஒரு தரமான டாக்டராக ஆகுவதனையே விரும்பினர். மாறாக கவலையான விடயம் என்னவென்றால், நான் நிர்மாண பொருளாதார துறையிலேயே சிகரங்களை அடைந்தேன். இவ்வளவு கூட இன்றும், நான் ஓய்வு பெற்றதன் விளைவாக ஓர் ஆலோசகராக மத்தியகிழக்குக்கு அழைக்கப்படுகிறேன்.

டீன் பாஸ் மாமாவினால் வழங்கப்பட்ட பயிற்சியும் போதிக்கப்பட்ட ஒழுக்க விழுமியங்களுமே இவ்வாறான வெற்றிகளின் பின்னணி என்பதனை அவரது சகல பிள்ளைகளும் ஏற்றுக் கொள்ளத் தவறுவது இல்லை.

ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பிய மாமனிதர் அஹமட் லெப்பை ஸெய்னுலாப்தீன் இன்றும் கூட, மக்களால் டீன் பாஸ் மாமா என அன்புடனும் மரியாதையுடனும் நினைவு கூறப்படுகின்றார்.

– கலாநிதி ஹாரீஸ் இஸட். டீன்

Refer to the Below PDF File

THE SAGE WHO BUILT A COMMUNITY