மீள்பார்வை இணையத்தளத்தில் தன்னார்வ செய்தியாளராகப் பணியாற்ற ஒரு சந்தர்ப்பம்.
இலங்கை நாட்டில் தனக்கான ஒரு தனியான ஊடகக் கலாச்சாரத்தை உருவாக்கிய மீள்பார்வைப் பத்திரிகையின் இணையத்தளத்தில் தன்னார்வ செய்தியாளராகப் பணியாற்ற ஒரு சந்தர்ப்பம்.
நீண்ட கால ஊடகப் பாரம்பரியத்தைக் கொண்ட மீள்பார்வைப் பத்திரிகையின் இணையத்தளத்தில் தன்னார்வ செய்தி ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்பும் இளம் ஊடகவியலாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. எமது ஆசிரியர் குழுவில் பணியாற்றி உங்கள் தொழில் வாழ்க்கைக்கான ஒரு சிறந்த அனுபவத்தைப் பெற்றிடுங்கள்.
- தமிழ் மொழிப்புலமை பிரதானமாகவும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிப்புலமை மேலதிக தகைமையாகவும் கருதப்படும்.
- செய்தியாசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்.
- சேவைக் காலத்தின் முடிவில் பெருமதிமிக்க அனுபவச் சான்றிதழ் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவும்.