ACCIDENTS: சட்டங்கள் மாத்திரம் குற்றங்களைக் குறைக்குமா?

0
1

2016 இல் இலங்கையில் வீதி விபத்துகள்

சட்டங்கள் மாத்திரம் குற்றங்களைக் குறைக்குமா?

நாளாந்தம் வீதி விபத்துக்களில் மக்கள் இறக்கும் நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும். வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 2016 இல் ஜனவரி முதல் நவம்பர் வரை எத்தனை எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2635 விபத்துகள் இவ்வாண்டில் இடம்பெற்றுள்ளன. இதில் டிசம்பர் மாதம் உள்ளடக்கப்படவில்லை. 2015 இல் இது 2587 ஆகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இறந்தோரில் 773 பாதசாரிகளும் 885 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் 214 சாரதிகளும் 395 பயணிகளும் 216 துவிச்சக்கர வண்டி ஓட்டுநர்களும் உள்ளடங்குவர்.

எவ்வகை வாகனங்களால் அதிகளவிலான விபத்துக்கள் நமது நாட்டில் இடம்பெற்றுள்ளன என்பதை பாதை பாதுகாப்புக்கான தேசிய சபை மதிப்பிட்டுள்ளது. அதன்படி ஆகக் கூடிய எண்ணிக்கையிலான விபத்துகளுக்குக் காரணமாக இருப்பது மோட்டார் சைக்கிள்களாகும். அதன் மூலம் 2015 இல் 1000 மரணங்களும் 2016 இல் 1200 மரணங்களும் சம்பவித்துள்ளன. முச்சக்கர வண்டிகளால் 2015 இலும் 2016 இலும் 380 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதற்கடுத்த இடத்தில் சிறிய வகை லொறிகள், தனியார் பஸ் வண்டிகள், வேன்கள், கார்கள், கெப் ரக வண்டிகள், அரச பஸ் வண்டிகள் என்பன வகைப்படுத்தப் பட்டுள்ளன.

டிரெக்டர்கள், ஜீப் வண்டிகள், கொள் கலன் வண்டிகள் மட்டுமன்றி, சாதாரண துவிச்சக்கர வண்டிகள் மற்றும் லேன் மாஸ்டர்கள் தொடர்பான மரணங்களும் குறிப்பிட்டளவில் சம்பவித்துள்ளன. இவற்றுள் முச்சக்கர வண்டிகளால் ஏற்படும் விபத்துகள் பற்றி கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கொடாகொட தெரிவித்துள்ளார்.

2016 இல் மாத்திரம் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப் பகுதியில் 358 மரணங்கள் முச்சக்கர வண்டியினால் ஏற்பட்டுள்ளன. மணித்தியாலத்திற்கு 50 கி.மீ. வேகத்தில் முச்சக்கர வண்டிகள் செலுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது என்று சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் அதிகாரிகள் வலி யுறுத்தி வருகின்றனர். ஆனாலும் முச்சக்கர வண்டிக்காரர்கள் மணித்தியாலத் திற்கு 50 கி.மீ. வேகத்தையும் தாண்டிச் செல்கின்றனர்.

மிகப் பாரம் குறைந்த வாகனம் என் பதனால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள வேகத்தின் அளவு சட்ட ரீதியில் குறைக்கப்படுவதோடு, சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான வயதெல்லை யும் அதிகரிக்கப்பட வேண்டும் என பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறி பாலடி சில்வாவிடம் கடந்த வாரம் இது தொடர்பான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி இறக்குமதியாளர்களைச் சந்தித்த டொக்டர் கொடாகொட, மணித்தியாலத்திற்கு 40 கி.மீ. அளவில் அவற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கு இறக்குமதியாளர்கள் உடன்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதிகூடிய வேகம் பாரம் குறைந்த இவ்வகை வாகனங்களைப் பாதைகளில் இலகுவாகப் புரளச் செய்கின்றது. சாரதிகளின் கட்டுப்பாட்டை மீறுகின்றது. இதன் விளைவாகவே அதிகமான மரணங்கள் சம்ப விக்கின்றன.

மாதத்திற்கு 2000 முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்யும் ஒரு கம்பனி, மணித்தியாலத்திற்கு 40 கி.மீ. என்ற அள வில் முச்சக்கர வண்டியின் வேகத்தை மட்டுப்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. சில முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கழுத்திற்கும் தோள்பட்டைக்கும் இடையில் செல்லிடத் தொலைபேசிகளைத் திணித்து பேசிக் கொண்டே ஓட்டுகின்றனர். அது சாரதியின் கவனத் தைக் கலைத்து விபத்துக்களை ஏற்படு த்துகின்றன என வீதிப் போக்குவரத்து உப பொலிஸ் பரிசோதகர் பாலித பெர்னான்டோ தெரிவிக்கின்றார்.

கடந்த 11 மாதங்களில் நடந்த 325 மிக ஆபத்தான முச்சக்கர வண்டி விபத்துகளில் 345 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் 300 முச்சக்கர வண்டி விபத்துக்களில் 350 பேர் உயிரிழந்தனர்.

முச்சக்கர வண்டிகள் தவிரவும் மோட்டார் சைக்கிள்கள், தனியார் பஸ் வண்டிகள், லொறிகள் மூலம் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த பத்தாண்டுகளில் வருடாந்தம் 2500 இற்கும் அதிகமானோர் வீதி விபத்துக்களில் இறந்துள்ளனர். அவர்களில் சாரதிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

இலங்கையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு வீதிகள் விஸ்தரிக்கப்படவில்லை என்பது சிலரது குற்றச்சாட்டாகும். ஆனால் மது போதையில் வாகனத்தை ஓட்டுதல், தூக்கத்தில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக ஓட்டுதல் போன்ற காரணங்களே விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

வீதி ஒழுங்குகளை மீறுவோருக்கு எதிரான தண்டப் பணம் 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமைக்கான காரணம், விபத்துக்களால் ஏற்படும் மரணங்களைக் குறைக்கவே என்கிறது அரசாங்கம். ஆனால், சாரதிகள் அருந்தும் மதுபானத் திற்கான தவறணைகளுக்கு அனுமதி வழங்குவதும் அரசாங்கமே. நடை முறைப்படுத்தலுக்கான கள ஒழுங்கு களைக் கவனிக்காமல் வெறுமனே சட் டத்தை இறுக்கமாக்குவதனால் விபத்துக்களைக் குறைக்க முடியாது. இதைத் தான் இலங்கையில் அதிகரித்து வரும் விபத்துக்கள் உணர்த்தியுள்ளன.

Image may contain: tree and outdoor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here