CIA  இன் அறிக்கைக்குப் பின்னர் ஆட்சிக் குடும்பத்திற்குள் பாரிய கருத்து வேறுபாடு

0
0

ஜமால் கஷூகியின் படுகொலை குறித்த இஐஅ யின் அறிக்கை வெளிவந்த பின்னர் முஹம்மத் பின் சல்மானை அடுத்த மன்னராக்குவதிலிருந்து தடுத்து நிறுத்த வேண்டும் என குடும்ப அங்கத் தவர்கள் பலர் கோரியுள்ளனர். சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலேயே மன்னர் குடும்பத்தில் அதிருப்திகளும் கருத்து வேற்றுமை களும் எழுந்துள்ளன.

இதற்கிடையில் அமெரிக்க ராஜாங்க உயர் அதிகாரி ஒருவர் பட்டத்துக்குரிய இளவரசராக அஹமத் பின் அப்துல் அஸீஸை நியமிப்பதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் எனத் தெரித்துள்ளார். அஹ்மத் பின் அப்துல் அஸீஸ் கடந்த   40 ஆண்டு காலமாக உள்விவகார அமைச்சராக இருந்து வருகின்றார்.

கஷூகியின் படுகொலை தொடர் பான சர்வதேச அழுத்தங்கள் சவூதி ஆட்சியாளர்கள் மீது அதிகரித்து வரும் நிலையில், பல இளவரசர்கள் ஆட்சி பீடத்தில் மாற்றம் வேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளனர். 82 வய தான மன்னர் சல்மானின் மரணத்திற் குப் பின்னர் முஹம்மத் பின் சல்மான் மன்னராக நியமிக்கப்படக் கூடாது என் பதே பெரும்பான்மையான இளவரசர் களின் நிலைப்பாடாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குடும்பத்திற்குள் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளைக் கவனத்திற் கொண்டு பட்டத்துக்குரிய இளவரசர் பதவியிலிருந்து முஹம்மத் பின் சல்மானை மன்னர் சல்மான் நீக்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தென் படவில்லை. ஆனால், 76 வயதான அஹ்மத் பின் அப்துல் அஸீஸே மன்னர் பதவிக்குத் தகுதியானவர் என்று சவூதியின் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இரண்டு மாதங்கள் வெளிநாட்டில் தங்கியிருந்த இளவரசர் அஹ்மத் பின் அப்துல் அஸீஸ், நாடு திரும்பியதன் பின்னர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்துக்குரிய இளவரசரை கடுமை யாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here