CIMA  கற்கைகள்

3
1

CIMA என்பது AAT ஐ விட மிகவும் பெரியது. 180 நாடுகளில் ஒற்றைத் தன்மையுள்ள கற்கைநெறியினை வழங்குவது. இதன் தொடக்கப் பெயர் The Institute of Cost and Management (ICM)  1919 ஏப்ரல் 18 இல் ஐக்கிய இராச்சியத்தின் தலைநகர் லண்டனில் ஸ்தாபிக்கப்பட்டது.

ஒரு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்நிறுவனம், சர்வதேச கணக்காளர் சம்மேளனத்தில் அங்கத்துவம் பெறுகின்றது. ஆளுநர் சபையொன்றினால் நிர்வாகம் செய்யப்படும் இந்நிறுவனத்தில் இலட்சக்கணக்கான அங்கத்தவர்களும் மாணவர்களும் இணைந்துள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட CIMA கணக்கியல் சார் பயிற்சிகளையும் தொழிற் தகைமையையும் வழங்கி வருகின்றது. அயர்லாந்திலும் இதன் பிரதான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இலங்கையில் எண்ணற்ற உள்ளூர் நிறுவனங்கள் இதன் கற்கைகளை தமது பிராந்திய நிலையங்களில் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CIMA கணக்கியல் கற்கைகளும் பாடத் திட்டமும் உள்ளடக்கமும் பரீட்சைகளும் உலகப் பொதுத் தன்மை (Global Uniformity) வாய்ந்தது. இலங்கையிலுள்ள அதன் கிளைக் காரியாலயத்துடன் ஒப்பந்தம் செய்த நிலையில், உள்ளூரில் நடத் தப்படுகின்ற விரிவுரைகளிலும் வகுப்புகளிலும் மாணவர்கள் பங்குபற்றலாம்.

ஐக்கிய இராச்சியத்தின் தலைமைக் கல்வி நிறுவனம் தயாரிக்கும் சர்வதே பரீட்சைக்கு மாணவர்கள் தோற்ற வேண்டும். AAT போன்ற முகாமைக் கணக்கியலை (Management Accounting) விருத்தி செய்வதே இதன் பிரதான பணியாகும்.

உலகிலுள்ள ஆகப் பெரிய முகாமை கணக்கியல் நிறுவனம் இதுவே. இன்று இந்நிறுவனத்தில் 205000 அங்கத்தவர்கள் உள்ளனர். இஐMஅ நிறுவனத்தின் சமீபத்திய வளர்ச்சி நிலைகளில் ஒன்று, இஸ்லாமிய நிதியியலில் அதன் கவனம் திரும்பியிருப்பதாகும். 2004 இல் உலகளவில் ஏற்பட்ட பாரிய பொருளாதாரப் பின்னடைவு இஸ்லாமிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பாதிக்கவில்லை. இவ்வுண்மையை உணர்ந்த மேலைய நாடுகள் இஸ்லாமிய வங்கிச் செயற்பாடுகளை தமது வங்கிகளின் ஒரு பகுதியாக ஏற்கத்துவங்கின.

இதனால், அத்தகைய வங்கிகளில் பணியாற்ற நிபுணத்துவம் வாய்ந்த இஸ்லாமிய நிதியியல் கணக்காளர்கள் தேவைப்படுகின்றனர். இத்தேவையைப் பூர்த்தி செய்ய CIMA நிறுவனம் இஸ் லாமிய நிதியியல் டிப்ளோமா (Diploma in Islamic Finance) எனும் பிரத்தியே கற்கைநெறியையும் நடத்தி வருகின்றது. உலகளாவிய ரீதியில் 60,000 மாணவர்கள் இதில் இணைந்துள்ளனர். இக்கற்கை யைப் பூர்த்தி செய்தவர்கள் தமது பெயர்களுக்குப் பின்னால்  CDIF எனக் குறிப்பிடுகின்றனர்.

CIMA கற்கை 5 மட்டங்களைக் கொண்டுள்ளது.

 1. CIMA Certificate Level
 2. CIMA Operation Level
 3. CIMA Management Level
 4. CIMA Strategic Level
 5. CIMA Top Level

ஒவ்வொரு மட்டத்தையும் பூர்த்தி செய்ய 6 மாதங்கள் அவசியம். மொத்தம் இரண்டரை ஆண்டுகள் தேவை. தொடராக ஒவ்வொரு மட்டத்தையும் பூர்த்தி செய்தால் இரண்டரை வருடங்களில்  Top Level  ஐயும் பூர்த்தி செய்யலாம். இது AAT ஐ விட சற்று செலவு கூடியது. கற்கைக் கட்டணம், பரீட்சைக் கட்டணம் என வெவ்வேறு வகையான கட்டணங்கள் உள்ளன.

தற்போதுள்ள கட்டணங்களின் படி மொத்தக் கற்கையையும் பூர்த்தி செய்ய சுமார் 6 லட்சம் இலங்கை ரூபாய்கள் செலவாகலாம். அதாவது ஒரே தடவை யில் ஒவ்வொரு மட்டத்தையும் பூர்த்தி செய்தால் இந்தத் தொகையுடன் செலவு மட்டுப்படுத்தப்படும். பூர்த்தி செய்கின்ற வர்களுக்கு ஊழியச் சந்தையில் உயர் ஊதியம் காத்திருக்கின்றது.

CIMA கணக்கியல் கற்கைக்கு விண்ணப்பம் செய்ய O/L, A/L தகுதிகள் எது வும் அவசியமில்லை. இதனால் சில மாணவர்கள் தரம் 8 அல்லது 9 இருந்தே இதில் இணைகின்றனர். எவ்வாறாயினும், சாதாரண தரத்திற்குப் பின்னர் இதில் இணைவது மிகவும் பொருத்தமானது. ஏனெனில், இலங்கையின் முறைசார் கல்வியில் சாதாரண தரம் முக்கியமானது.

ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போன்று இலங்கையில் விரிவுரைகளை யும் வகுப்புக்களையும் நடத்தும் ஏகப் பட்ட நிறுவனங்கள் தலைநகர் கொழும் பிலும் நாட்டின் பிற நகரங்களிலும் செயற்படுகின்றன.

CIMA செய்ய இரண்டே இரண்டு தகுதிகள்தான் தேவை. ஒன்று ஆங்கில மொழிப் பரிச்சயம். இரண்டு நேரத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணம். அவ்வ ளவுதான். உங்களாலும் நாளை ஒரு தொழில்சார் கணக்காளராகப் பரிணமிக்கலாம்.

3 COMMENTS

 1. Srilankan chartered accountancy is much better than CIMA. CIMA accountants cannot practice in Sri Lanka. In Gulf countries also SL Chartered have vey good demand. Even in SL, sl ca are getting paid much more than CIMA.

 2. This is a misleading information. Most of the CIMA qualified accountants are much higher position than Sri Lankan CA.Big difference is English and Subject content. Further Charted Accountancy has no relevance in the current world.

  • CIMA accountants cannot practice in Sri Lanka.
   CIMA acc, starts the jobs with low salary while CA start with salary.
   To become Sri Lankan CA, you need to have three years practice under the qualified CA accountants.
   CIMA can be started without OL, but to register CA at lest A/L 3 passes.
   So, please don’t mislead the society with wrong information because of ego problem.
   Simply, if you have money you become CIMA accountant not CA.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here