GSP: கோரிக்கைகளுக்கு தலைசாய்ப்பதற்காக இலங்கைக்கு மேலும் 400 கோடி

0
0

மந்தமான போக்கில் தற்பொழுது சென்றாலும், GSP சலுகைக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யக் கூடிய ஆற்றல் இலங்கைக்கு இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டமைச்சர் திலக் மாரப்பன, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளியல் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உட்பட மற்றும் பல அதிகாரிகள் ப்ரஸல்ஸுக்கு விஜயம மேற்கொண்டு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளைச் சந்தித்த போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

GSP க்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ள முன்னேற்றங்கள் இந்தச் சந்திப்பின் போது கருத்தில் கொள்ளப்பட்டன. சட்டத் திருத்தம் கொண்டுவருவதன் ஊடாக மனித உரிமைச் செயற்பாடுகளில் சர்வதேசத் தரம் பேணப்படவுள்ளதாகவும், ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒழுங்குகளை நடைமுறைப்படுத்துவதாகவும், சீர்திருத்தங்களுக்கென அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பைப் பெறும் வகையில் பாராளுமன்றத்தில் புதிய பொறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்புத் திருத்த வேலைகள் நடைபெற்றுவருவதாகவும், சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் அமைச்சர் திலக் மாரப்பன இந்தச் சந்திப்பின் போது ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வர்த்தக வசதிகளை வழங்குவதற்காகவும், இலங்கையில் மீள் இணக்கச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தவும் என ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மேலதிகமாக 4 கோடி யூரோக்களை வழங்கவுள்ளதாக இந்தச் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here