முஸ்லிம் மற்றும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் கருணையின் அடிப்படையில் உடனே விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்- பாப்புலர் ஃப்ரண்ட்

0
4

முஸ்லிம் மற்றும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் கருணையின் அடிப்படையில் உடனே விடுதலை செய்ய தமிழக அரசு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்!  – பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்!
பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியாவின் வட மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையிலும், தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் செப்டம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில்  கன்னியாகுமரியிலும் மாநில தலைவர் M.முகம்மது இஸ்மாயீல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் M.முகம்மது சேக் அன்சாரி, மாநில செயலாளர்கள் J. முகம்மது ரசின் மற்றும்A.முகைதீன் அப்துல் காதர் மற்றும் அனைத்து  மாவட்ட தலைவர், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :
தீர்மானம் 1: முஸ்லிம் மற்றும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் கருணையின் அடிப்படையில் உடனே விடுதலை செய்ய தமிழக அரசு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆயுள் சிறைவாசிகள் விடுதலை சம்மந்தமாக முஸ்லிம் சமூகத்திலிருந்து தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது. இந்த விஷயத்தில் தமிழக அரசு மனம் இறங்கி அவர்களை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ல் விடுதலைக்கான அறிவிப்பை உடனே அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கடந்த செப்டம்பர் 29 அன்று சென்னையில் மாபெரும் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. மனித உரிமையில் ஆர்வமுள்ள பலர் இதுபோன்று பல்வேறு போராட்டங்களை நடத்திய போதும், விடுதலை குறித்து இது வரை எந்த அறிவிப்பும் வராதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
எனவே போராட்டத்தின் அடுத்த கட்டமாக தமிழக அரசின் கவனத்திற்கு இச்செய்தியை கொண்டு சேர்க்கும் விதமாக மாநிலம் தழுவிய அளவில் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும் என  பாப்புலர் ஃப்ரண்ட் தீர்மானித்துள்ளது. முஸ்லிம் மற்றும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்காக நடத்தப்படும் எல்லா வித  போராட்டத்திற்கும் மக்கள் பெருவாரியான ஆதரவை அளிக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 2:  தலைவர்களை குறிவைத்து திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து உரிய பாதுகாப்பு வழங்க  தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
சமீப காலமாக தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஜாதி ரீதியான மோதல்களில் தலித்துகள் தாக்கப்படுவதும், அவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. ஜாதி மற்றும் மத ரீதியாக மக்களின் உணர்வுகளை தூண்டி அரசியல் செய்வதை பாப்புலர் ஃப்ரண்ட் கண்டிக்கிறது .மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை  தஞ்சை மாவட்டம் வடச்சேரியில் சில சமூக விரோதிகள் தாக்க முற்பட்டது, தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் அவர்கள் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது என தலைவர்களை குறிவைத்து நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.
எனவே இது போன்ற தீய செயல்களில் ஈடுபடுவர்கள் மீது தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,  பிற்படுத்தப்பட்ட  மக்களின் நலனுக்காக  போராடும் தலைவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும்  பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுகொள்கிறது.
தீர்மானம் 3: சமூக ஆர்வலர்கள் படுகொலைகள் செய்யப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கடந்த சில  தினங்களுக்கு முன்பாக மூட நம்பிக்கைக்கு எதிராகவும், இந்துதுவ ஃபாசிஸ்டுகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வந்த மூத்த கன்னட எழுத்தாளர் எம்.எம். கல்பர்க்கி அவர்கள் சமூக விரோதிகளால் திட்டமிட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதைப் போல் இந்துத்துவ ஃபாசிஸ்டுகளால்  நேற்றைய தினம் கன்னட எழுத்தாளர் கே.எஸ்.பகவான் அவர்களுக்கு  கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.
மோடி தலைமையிலான  பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து சமூக ஆர்வலர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது. கடந்த ஃபிப்ரவரியில் கூட மகாராஷ்டிரா மாநிலத்தில் சமூக போராளியான கோவிந்த பன்சாரே அவர்கள் இந்துத்துவ ஃபாசிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
எனவே இது போன்ற தீவிரவாத நடவடிக்கைகளில்  தொடர்ந்து ஈடுபட்டு வரும் சமூக விரோத கும்பல்களை மத்திய மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும், இத்தீய சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 4: திப்பு சுல்தான் மணிமண்டபம் கட்டுவதை துரிதப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதந்திர போராட்ட தியாகி தீரன் திப்பு சுல்தான் அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பை கடந்த 2013-ல்  சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்டார்கள். அதற்கான முதல்கட்ட வேலைகளை அரசு துவங்கினாலும் சில நடைமுறை பிரச்சனைகளால் கிடப்பில் போடப்பட்டுள்ளது வருத்தத்திற்குரியது. எனவே தமிழக அரசு தலையிட்டு  திப்பு சுல்தான் மணிமண்டபம் கட்டுவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுகொள்கிறது.
 
இப்படிக்கு,
M.முகம்மது ஷேக் அன்சாரி,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here