"RTI க்கு முகம் கொடுக்க முடியவில்லை" வெலிஅமுன பதவி துறப்பு

0
2

உள்ளக முகாமைத்துவத்தின் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தொழிற்சங்கவாதிகள் முன்வைத்த தகவலறியும் உரிமை விண்ணப்பங்களுக்கு பதிலளிக்க முடியாத நிலையில்  ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நஷனல் நிறுவனத்தின் தலைவர் லக்ஷான் டயஸ், அதன் உறுப்பினர் ஜே.ஸீ. வலிஅமுன ஆகியோர் பதவி துறந்துள்ளனர்.

புதிய தலைவராக எஸ்.ஸீ.ஸீ.இலங்கோவனும் மற்றும் மூன்று புதிய பணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கோவன் தற்போது தேசிய அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலணியின் (NNAF) ஆலாசகராகவும் தொழிற்படுகிறார்.

ஊழலுக்கெதிரான கூட்டமைப்பு (CAC) முன்வைத்த 06 RTI விண்ணப்பங்களும் தகவல் உத்தியோகத்தரால் (IO) மறுக்கப்பட்ட நிலையில் அது நியமன உத்தியோகத்தரான(DO) நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி அசோக ஒபயசேகரவிடம் மேன்முறையீடு செய்யப்பட்டது.

வெளிநாட்டுப் பெண்மணி ஒருவருக்கு இலங்கையில் பணிபுரிவதற்கான வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டது தொடர்பிலேயே தவறான முகாமை நடந்துள்ளதாகத் தெரியவருகிறது.. இது போன்ற சில முறைகேடான முகாமைத்துவமே இவர்களின் பதவி துறப்புக்கு காரணமாக அமைந்த்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தகவலறியும் உரிமை வழங்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களைப் பெற்று வெளியிடப் போவதாகவும் முதலில் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் சொத்து விபரங்கள் பெறப்பட்டு வெளியிடப்படும் எனவும் ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நஷனல் முன்னர் தெரிவித்திருந்த போதும் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் சொத்து விபரங்கள் இவர்களுக்கு வழங்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here