"WADJDA" – சவூதி நாட்டின் முதல் பெண் இயக்குனரின் படம்

0
1

 – அபூஷேக் முஹம்மத், 2014 –

10690110_939031076112054_881784760178733520_nபெண் இயக்குனர் ஹைபா அல் மன்சூர்; குழந்தை, அம்மா இருவரின் உணர்வுகளையும் அழகாக இயக்கி இருக்கின்றார்.

தேவையான இடத்தில் வரும் பின்னணி இசை, பறை சப்தத்தில் கலந்து நிறைவாக உள்ளது.

வத்ஜ்தா உடைய நண்பனாக வரும் சிறுவயது அப்துல்லாஹ் நடிப்பு பிரமாதம்…

வத்ஜ்தா எந்த கதாபாத்திரத்தில் நடித்த வஅத் முஹம்மத் என்ற சிறுமி பிரமாதப்படுத்தி இருக்கின்றார்…

அவரின் தாயாக நடித்த ரீம் சிறுமியின் தாயாக யதார்த்தமாக நடித்துள்ளார்…

ஹைபா அல் மன்சூர் அவர்கள் இரண்டு பெண்கள் மனோநிலையை தாய் மகளாக பிரித்து தன்னம்பிக்கை மட்டும் மையமாக வைத்து வெற்றி நோக்கி நேர்மையாக போராடும் சிந்தனையை சொல்லி இருக்கின்றார்.

wadjdaசவுதி அரேபியாவின் புவியியல் சூழலை வைத்து சொன்னது டிஜிட்டல் இலக்கியத்தில் அவருக்கான இடத்தை தக்கவைத்து விட்டார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

கதைக்கான மரியாதையை மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள் என்பது மற்ற நாடுகளில் புலப்படுகின்றது …

இந்தியா பொறாமையிலும், பிறரை தட்டிகொடுக்காமல் சிறந்த ஆக்கங்களை மறைப்பதிலுமே உழன்று கிடைக்கின்றார்கள் மீடியா, பத்திரிக்கை மற்றும் சஞ்சிகை ஆசிரியர்கள்…!

Wadjda- பெண்பிள்ளைகளின் வெற்றிக்கொண்டாட்டம் : ரொம்ப நல்லா இருக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here